India News
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா சூர்யா

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் சூர்யா களமிறங்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
இந்தநிலையில் குறித்த செய்தி உண்மைக்குப் புறம்பானது என சூர்யா நற்பணி இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன் குறித்த அறிக்கையில் இது நடிகர் சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கலை உலகப் பயணமும் அகரமும் இப்போதைய நடிகர் சூர்யாவின் வாழ்வுக்கு போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.