Sri Lanka News
மீனவ சமூகத்திற்கு அவசர விபத்து காப்புறுதி திட்டம் அறிமுகம்

உவர்நீர் மற்றும் நன்னீர் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவ சமூகத்திற்காக அவசர விபத்து காப்புறுதி முறையை கமநல மற்றும் விவசாயக் காப்புறுதி சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டம், அசாதாரண காலநிலை, காலநிலை மாற்றங்கள் அல்லது மீன்பிடி தொழிலின்போது ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்பு, ஊனம் அல்லது பிற அசம்பாவிதங்களுக்கு இழப்பீடு வழங்குகிறது. மீன்பிடி தொழிலுக்கு அப்பாற்பட்ட விபத்துகளுக்கும் பிரதிபலன்கள் வழங்கப்படும்.
வருடாந்தம் 2,000 ரூபாய் கட்டணமாக செலுத்தி, உயிரிழப்பு ஏற்பட்டால் 12 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். பூரண அல்லது தற்காலிக ஊனம், ஒரு கண் இழப்பு, ஒரு மூட்டு இழப்பு, முழுமையான பேச்சு இழப்பு போன்றவற்றுக்கு விரைவான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது