Sports
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 – ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் ஏற்கெனவே முதல் போட்டியை வென்று முன்னிலையில் உள்ளதால் இந்த போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்ல முயற்சி செய்யும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் அணி இதில் வென்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும் என்ற கட்டாயத்துடன் விளையாடவுள்ளது. இதனால் எந்த அணி வெற்றியை ஈட்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.