Sri Lanka News
கிழக்கு கடற்படை தளபதிக்கும் ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

கிழக்கு மாகாண கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது இன்று(14) திருகோணமலையில் உள்ள கிழக்கு ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
மரியாதை நிமிர்த்தமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு, சுமூகமான இடம்பெற்றதாக ஆளுநர் அலுவலக ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கிழக்கு மாகாண கடற்படையின் 28 ஆவது தளபதியாக ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா கடந்த மாதம் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.