News

கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சியில் முன்னணி பங்கு வகிக்கும் சட்டத்தரணி முஜீப் அமீன்.!!

எஸ். சினீஸ் கான்

தெற்காசிய பிராந்தியத்தில் பரக்கா சரட்டி (Barakah Charity) அமைப்பின் செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் சட்டத்தரணி முஜீப் அமீன் அவர்கள், கல்வி துறையில் மட்டும் அல்லாமல், சுகாதார துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறார். குறிப்பாக, கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சி என்பது அவரது சமூகப்பணிகளில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.

கிண்ணியா ஆதார வைத்தியசாலை, ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய வைத்தியசாலையாக இருந்தாலும், பல ஆண்டுகளாக புனர்நிர்மாணம் செய்யப்படாமல், அடிப்படை வசதிகளற்ற நிலையிலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சைக்காக மக்கள் தூர இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய நிலை போன்றன நோயாளிகளின் பாதுகாப்பையே ஆபத்துக்குள்ளாக்கி வந்தது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற தெளிவான குறிக்கோளுடன் முஜீப் அமீன் அவர்கள் செயல்படத் தொடங்கினார்.

பரக்கா சரட்டியின் வழியாக அவர் மேற்கொண்ட மருத்துவ சேவை முயற்சிகள் பின்வருமாறு:

  • வைத்தியசாலை புனர்நிர்மாணத்திற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளன.
  • OPD பிரிவில் குளிர்சாதன வசதிகள் (AC) நிறுவப்பட்டு, நோயாளிகள் சுகமாக சிகிச்சை பெறும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • அத்தியாவசிய வைத்திய உபகரணங்கள் வழங்கப்பட்டு, தினசரி சிகிச்சை தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • அதிகமான நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலையை கருத்தில் கொண்டு, குளிரூட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோன்று, மிக விரைவில் Kidney Dialysis Machine நிறுவும் பணியும் நிறைவேற உள்ளது; இது அந்தப் பகுதியின் சிறுநீரக நோயாளிகளுக்கு உயிர் காப்பாற்றும் சேவையாக இருக்கும்.

கிண்ணியா ஆதார வைத்தியசாலையை வெறும் அடிப்படை சிகிச்சை மையமாக அல்லாமல், நவீன வசதிகளுடன் கூடிய, பல பிரிவுகளைக் கொண்ட ஒரு முக்கிய மருத்துவ மையமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் சட்டத்தரணி முஜீப் அமீன் செயற்படுகிறார்.

இவரது சேவைகள் கிண்ணியா பகுதியிலுள்ள மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. மருத்துவ வசதிகளை நேரடியாக மேம்படுத்தும் அவரது பணி, வெறும் உதவி அல்ல; அது அந்தப் பகுதியின் எதிர்கால சுகாதார அமைப்புக்கான வலுவான அடித்தளமாகும்.

அவரது சமூகப்பணிகள் தொடர எமது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button