Sports

சம்மாந்துறை மஜீட் புர வித்தியாலய மாணவர்களுக்கு மாகாண மட்டத்தில் நீச்சல் போட்டி வெற்றி!

✍️மஜீட். ARM

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட நீச்சல் போட்டியில், சம்மாந்துறை வலயத்தைச் சேர்ந்த கமு/சது/மஜீட் புர வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்!

12 வயதுக்குட்பட்டோருக்கான 4x50m அஞ்சல் நீச்சல் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அவர்கள் வெற்றிவாகை சூடியுள்ளனர்.

இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்த சம்மாந்துறை பிரதேச சபைக்கும், அவர்களுக்கு இலவசமாக நீச்சல் தடாகத்தை வழங்கியமைக்காகவும், அத்துடன் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்த( சம்மாந்துறை அல் -உஸ்வா உயிர் காப்பு படையணிக்கும்) மஜீட் புர வித்தியாலய அதிபர் மட்டும் பாடசாலை மாணவர்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

இந்த இளம் வீரர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button