Sports
பதக்க வேட்டையில் இலங்கை

தாய்லாந்து திறந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
இதன்படி பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிமாலி லியனாராச்சி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இதேபோல், ருசிரு சதுரங்க ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார், இதற்கு முன்னதாக அவர் 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
அத்துடன் அயோமல் அகலங்க ஆண்கள் 400 மீற்றர் தடை தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.