கத்தாரில் பறிமுதல் செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை – ஏலத்துக்கு வரும் வாகனங்கள் தொடர்பான அறிவிப்பு

கத்தாரின் போக்குவரத்து திணைக்களம் ஜூலை 14ஆம் திகதி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், மூன்று மாதங்களுக்கு மேலாக பறிமுதல் செய்யப்பட்டு உள்ள வாகனங்களின் உரிமையாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வாகன உரிமையாளர்கள், Industrial Area Street No. 52-இல் அமைந்துள்ள வாகன பறிமுதல் பிரிவிற்கு நேரில் சென்று, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாகனங்களை மீண்டும் பெற, நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்கள், நிறுத்துமிடக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களை முழுமையாக செலுத்துதல் அவசியமாகும்.
இந்த நடைமுறை 2025 ஜூலை 15ஆம் திகதி தொடங்கி 30 நாட்கள் வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலக்கெடுவுக்குள் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அந்த வாகனங்கள் சட்டத்தின் படி பொதுவெளி ஏலத்திற்கு விடப்படும் எனவும் திணைக்களம் கடும் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.