சம்மாந்துறை ஆலையடி வட்டை மைதானத்தை பார்வையிட்ட தவிசாளர்.

✍️மஜீட். ARM
சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் ஆலையடி வட்டைப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மைதானத்தை நேரில் பார்வையிட்டார். இளைஞர்களை ஊக்குவித்து, அவர்களை போதைப்பொருள் போன்ற சமூகச் சீரழிவுகளிலிருந்து பாதுகாக்கும் நோக்குடன் இந்த மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.
இளம் தலைமுறையின் முன்னேற்றத்திற்கு விளையாட்டுத் துறை மிக முக்கியமானது என்பதை கள விஜயத்தின்போது தவிசாளர் மாஹிர் வலியுறுத்தினார். “விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கும் இவ்வாறான நடவடிக்கைகள், சம்மாந்துறையின் இளம் தலைமுறையின் முன்னேற்றத்திற்கான ஒரு முக்கிய படியாக அமைகின்றன,” என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், விளையாட்டு அபிவிருத்திக்காக பிரதேச சபை தொடர்ந்து முழுமையாகச் செயல்படும் என்பதையும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
இந்தக் கள விஜயத்தில் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களுடன், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஆர். ஆசிக் அஹமட், எச்.எம். காலித் மற்றும் எஸ்.எல்.எம். பஹ்மி ஆகியோரும் கலந்துகொண்டனர்.