Sports
கோலி – ரோஹித் விரைவில் ஓய்வு?

இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விரைவில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி ஒக்டோபரில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரே இவர்களது இறுதி சர்வதேச தொடராக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் வரை விளையாடுவதற்குக் குறித்த 2 வீரர்களுக்கும் விருப்பம் இருந்தாலும், அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடவேண்டும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.