மகளிர் உலகக்கோப்பை அட்டவணையில் மாற்றம்

13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்திகதி முதல் நவம்பர் 2-ந்திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்தியா மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் இந்தூரில் போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டன.
பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் கேரளாவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டால் அங்கு போட்டிகளை நடத்த கர்நாடக மாநில அரசு அனுமதி மறுப்பு தெரிவித்தது.
இதனால் பெங்களுரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற இருந்த மகளிர் உலக கோப்பை போட்டிகள் நவி மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டள்ளது.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும் பட்சத்தில் முதல் அரையிறுதி போட்டி கவுதாத்தி அல்லது இலங்கையில் நடைபெறும்.
2-வது அரையிறுதி நவி மும்பையில் நடைபெறும். இறுதிப்போட்டி நவி மும்பை அல்லது இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது.