World News
நீண்ட நாள் காதலியை கரம் பிடிக்கும் ரொனால்டோ..!

காற்பந்து விளையாட்டில் இந்தத் தலைமுறையின் சிறந்த வீரராக கிறிஸ்டியோனோ ரொனால்டோ கருதப்படுகின்றார்.
ரொனால்டோ காற்பந்து மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நிலையில், விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் அவர் சம்பாதித்து வருகிறார்.
இவர் 2015 ஆம் ஆண்டு வரை இரினா ஷாய்க் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இரினாவுடனான ஐந்து வருடத் தொடர்பை முறித்துக் கொண்ட பின் அதன்பின், 2016 இல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பழகத் தொடங்கினார். தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் தான் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார்.
திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் ரொனால்டோ – ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், தனது நீண்டநாள் காதலி ஜார்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.