India NewsSports

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் திலிப் தோஷி (Dilip Doshi) காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் தமது 77 வயதில் லண்டனில் நேற்று காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1979 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், திலிப் தோஷி இந்திய கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

இந்த காலப்பகுதியில், 33 டெஸ்ட் போட்டிகள் பங்கேற்று 114 விக்கெட்டுகளையும், 15 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 22 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

திலிப் தோஷி இறப்பிற்கு சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்தனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button