Sports

நற்பட்டிமுனையில் சோபர் விளையாட்டுக்கழகம் வரலாற்றுச் சாதனை!

நற்பட்டிமுனை மண்ணில் நடைபெற்ற மர்ஹூம் நியாஸ் வெற்றிக்கிண்ணப் போட்டியில் அட்டாளைச்சேனை
(SOBER SC) விளையாட்டுக்கழகம் தொடர்ச்சியாக நான்காவது முறையாகவும் சம்பியன் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது!

நற்பட்டிமுனை New Generation விளையாட்டுக்கழகம் நடத்திய இப்போட்டியில், 50,000/- பணப்பரிசுடன் வெற்றிக்கிண்ணத்தையும் சோபர் அணி தனதாக்கியது.

இறுதிப்போட்டியின் ஹைலைட்ஸ்!
இறுதிப்போட்டியில் Marks Man SC அணியுடன் மோதிய சோபர் அணி, 92 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து அபார வெற்றி பெற்றது.

இது சோபர் அணி இறுதிப்போட்டியில் பெற்ற இரண்டாவது அதிகபட்ச ஓட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 🏏
தொடர் நாயகன்: K. Mohamed Akram
இறுதிப்போட்டி மற்றும் தொடர் ஆட்டநாயகனாக சோபர் கழகத்தின் நட்சத்திர வீரர் K. Mohamed Akram தெரிவு செய்யப்பட்டார்! அவரது சிறப்பான ஆட்டம் அணிக்கு மேலும் பலம் சேர்த்தது.

இந்த மாபெரும் வெற்றிக்கு சோபர் விளையாட்டுக்கழகத்தின் அனைத்து வீரர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எமது சோசியல் டிவி வாழ்த்துக்கள்!

#SOBERSC #Champions #Cricket #Narpattimunai #NewGeneration #sports Social TV Socialtv Media Network

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button