News

வரியால் அதிகரித்த புத்தகங்களின் விலை; அழிவடைந்து வரும் விற்பனை

பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி விதிக்கப்பட்டதால் அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் வருடாந்திர ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர இதனை தெரிவித்தார்.

ஒரு புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதாவது ஐந்தில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது. முன்பு, எழுதுபொருள் உட்பட அனைத்திற்கும் VAT வரி விகிதம் 15 சதவீதமாக இருந்தது. ஆனால் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு VAT வரி இல்லை.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, ஜனாதிபதி செயலகத்திலிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது, அதில் அவர்கள் VAT வரி தொடர்பாக சில விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும், பின்னர் ஒரு பதிலை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு எங்கள் புத்தகங்களுக்கு VAT வரி அறவிடப்படுகிறது என தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் புரவலர் காமினி மொரகொட தெரிவித்தார்

இலங்கையில் 75 ஆண்டுகளாக நடைமுறையில் இல்லாத VAT வரி, ஜனவரி 2024 முதல் விதிக்கப்பட்டதால் புத்தக விற்பனை அழிவடைந்து வருகிறது. என தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button