News

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கு தகுதியுடையோரின் பெயர் பட்டியல் வெளியீடு

அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு தகுதியான பயனாளிகளின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பட்டியல் அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர் மற்றும் திணைக்கள அலுவலர்கள் அலுவலகங்களின் அறிவிப்பு பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதே பட்டியல் நலன்புரி சபையின் உத்தியோகப்பூர்வ வலைத்தளமான www.wbb.gov.lk இலும் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்திற்கான தகவல் சேகரிப்பின் போது வழங்கப்பட்ட தகவல்களில் ஏதேனும் பிழை அல்லது முரண்பாடு இருப்பதாக உணரும் விண்ணப்பதாரர்கள் மற்றும் தகுதியான பயனாளிகளின் பட்டியலில் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றால், அவர்கள் மேன்முறையீடு செய்யலாம்.

அஸ்வெசும கட்டம் 2யிற்க்கான ஆரம்ப விண்ணப்பத்தை சமர்ப்பித்த போதிலும், வீட்டுத் தகவல்களைச் சேகரிக்க ஒரு அரசு கள அலுவலர் அவர்களின் வீட்டிற்குச் செல்லவில்லை என்றால், அத்தகைய விண்ணப்பதாரர்களும் மேல்முறையீடு செய்யலாம்.

மேன்முறையீடு செய்வதற்கு முன், IWMS தரவுத்தளத்தை அணுகி, வீட்டுத் தகவல் சேகரிப்பின் போது அவர்களின் குடும்பம் குறித்து வழங்கப்பட்ட தகவல்களைக் கண்காணிக்க வேண்டும்.

மேன்முறையீட்டாளர்கள்/ ஆட்சேபனையாளர்கள் www.wbb.gov.lk என்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்திற்குச் சென்று மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் சமர்ப்பிப்பு மெனுவை உள்ளிடுவதன் மூலம் தங்கள் மேல்முறையீடுகள்/ ஆட்சேபனைகளை இணையத்தில் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை இணையவழியில் சமர்ப்பிக்கும் போது தங்கள் பகுதியில் உள்ள விதாதா வள மையங்களிலிருந்தும் உதவி பெறலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button