சம்மாந்துறை புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கத்தினால் கிராம சேவகருக்கான வரவேற்பு மற்றும் பிரியாவிடை நிகழ்வு!

Socialtv Media Network
கடந்த 5 வருடங்களாக புளக் ஜே கிழக்கு 03 கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றிய எம்.ஏ.சித்தி பஸ்றியாவின் பிரியாவிடை நிகழ்வும், புளக் ஜே கிழக்கு 03 பகுதிக்கு புதிய கிராம சேவகர் ஏ.எல்.அப்துல் றசூல் அவர்களை வரவேற்கும் நிகழ்வும் இன்று வியாழக்கிழமை (03) புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கத்தின் தலைவி ஏ.கே.றஸ்மினாவின் தலைமையில் புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்க காரியத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், புளக் ஜே கிழக்கு 03 பகுதியில் கிராம சேவகராக கடமையாற்றிய சித்தி பஸ்றியாவிற்கான நினைவுச் சின்னம் மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பும் வழங்கப்பட்டது.
மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் சம்மாந்துறை பிரதேச சபைக்கு தெரிவான தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர், பிரதேச சபை உறுப்பினர் பஹ்மி சுலைமான் லெப்பை ஆகியோருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.டி.றோசான், ஏ.எல்.அஸ்ரப், எஃப்.ஜே.நிலாந்தி, சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.அஹமட் சபீர், சமூர்த்தி உத்தியோகத்தர் எம்.டி.பௌசியா, அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.எஃப்.சகீலா, குடும்ப நல உத்தியோகத்தர் ஏ.லதா, தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.வாஜித் அலி, புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்