News
இலங்கையில் ஸ்டார்லிங்க் – எலான் மஸ்க் அறிவிப்பு

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், தனது செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையான ஸ்டார்லிங்க் சேவையானது தற்போது இலங்கையில் கிடைக்கும் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
தனது சமூக ஊடக தளமான ‘X’ இல், மஸ்க் குறிப்பிட்டுள்ளதாவது , “இலங்கையில் ஸ்டார்லிங்க் இப்போது கிடைக்கிறது!” என்று பதிவிட்டார்,
இது நாட்டில் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவையினை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துகிறது.
இலங்கை அரசாங்கம் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய வழங்குநர்களை ஏற்றுக்கொள்ள அதன் தொலைத்தொடர்பு சட்டங்களைத் திருத்திய பிறகு, ஆகஸ்ட் 2024 இல் ஸ்டார்லிங்க் ஒழுங்குமுறை அனுமதியைப் பெற்றது.