News
ஸ்ரீ லங்கன் விமான சேவையுடன் இணையும் புதிய விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்

ஸ்ரீ லங்கன் விமான சேவை புதிதாகக் கொள்வனவு செய்த, 4R-ALT எனப் பதிவு செய்யப்பட்டுள்ள எயார் பஸ் A330-200 விமானம், பிரான்ஸிலிருந்து வந்த விசேட விமான பயணத்தின் பின்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்த விமானம் 1,500 அடி உயரத்தில் இன்று பறந்தது.
அதன்படி, கொழும்பு துறைமுக நகரத்தின் தெற்கிலிருந்து மொறட்டுவை வரை இந்த விமானம் பறந்தமை குறிப்பிடத்தக்கது.