News
இதுவரை 11,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு..

இம்முறை சிறுபோகத்தில் இதுவரை 11,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்தது.
அதிகளவிலான நெல் அம்பாறை மாவட்டத்தில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த கூறினார்.
நாடு நெல் ஒரு கிலோ 120 ரூபாவுக்கும் சம்பா நெல் ஒரு கிலோ 125 ரூபாவுக்கும் கீரி சம்பா நெல் ஒரு கிலோ 132 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலேயே நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.