Sports
ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டி – தங்கம் வென்ற இலங்கை வீரர்!

2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை வீரர் ருமேஷ் தரங்க பத்திரகே தங்கம் வென்றுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டி, தென் கொரியாவில் நடைபெற்று வருகின்றது.
குறித்த போட்டியில் இலங்கையின் வீரர் ருமேஷ் தரங்க பத்திரகே பங்குபற்றி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் குறித்த வீரர் 82.05 மீற்றர் தூரம் வரை ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்தார்.
முதலிடத்தைப் பிடித்த இலங்கை வீரர் தங்கப்பதக்கத்தை வென்று இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.