Home இந்தியா செய்திகள்எம்எல்ஏக்களுக்கு கடன் வாங்கி கார் எதற்கு? – முதல்வருக்கு சீமான் கேள்வி

எம்எல்ஏக்களுக்கு கடன் வாங்கி கார் எதற்கு? – முதல்வருக்கு சீமான் கேள்வி

by Mohamed Siraj
0 comments

எம்எல்ஏக்களுக்கு இலவச கார் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இலவச கார் வழங்கப்படும். தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் ரூ.1 லட்சம் கூடுதலாக வழங்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

கார் இல்லாத எம்எல்ஏக்களுக்கு மட்டும் அரசு கார் வழங்கினால்கூட நியாயம் உண்டு. ஆனால், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களில் 190 பேரிடம் ஏற்கெனவே சொந்தமாக கார் உள்ளதாக வேட்பு மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் நிலையில், கடன் வாங்கி

banner

புதி​தாக கார் எதற்கு? ஒரு கார் விலை குறைந்​த​பட்​சம் ரூ.30 லட்​சம் என்​றாலும், மொத்​த​மாக ரூ.70 கோடி தேவை. அதே​போல் 234 உறுப்​பினர்​களுக்​கும் மாதம் தலா ரூ.1 லட்​சம் வழங்க ஆண்​டுக்கு ரூ.28 கோடி தேவை. இதெல்​லாம் யாருடைய வரிப்​பணம்? விவ​சா​யிகள் விளைய வைத்த நெல்லைப் பாது​காக்க கிடங்​கு​கள் இல்​லை.

ஆனால் ஏற்​கெனவே ஒன்​றுக்கு இரண்டு கார் வைத்​துள்ள எம்​எல்​ஏக்​களுக்கு சொகுசு வாக​னம் வழங்க இத்​தனை கோடிகளை வாரி இறைப்​ப​தா? மறை​முக மின்​கட்டண உயர்​வு, சொத்​து ​வரி உயர்​வு, பேருந்து கட்டண உயர்வு போன்​றவற்றை சரி செய்​யாமல் மக்​கள் வரிப்​பணத்தை வீணடிக்​கும் இது​போன்ற திட்​டங்​களைக் கைவிட்​டு, ஆக்​கப்​பூர்​வ​ மக்​கள்​நலத் திட்​டங்​களை செயல்படுத்த வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

You may also like

Leave a Comment