Home இலங்கைச் செய்திகள்அவசர அறிவிப்பு: பொலிஸ் நற்சான்றிதழ் வழங்கும் கணினி கட்டமைப்பு முடங்கியது!

அவசர அறிவிப்பு: பொலிஸ் நற்சான்றிதழ் வழங்கும் கணினி கட்டமைப்பு முடங்கியது!

by Mohamed Siraj
0 comments

பத்தரமுல்லை, சுஹுருபாய கட்டடத்தின் 17 ஆவது மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் பிரிவினால் இந்தச் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுவதுடன், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது, அறிக்கைகளைக் கோருவது மற்றும் சான்றிதழ்களை அச்சிடுவது ஆகியன குறித்த தரவுக் கட்டமைப்பின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் அந்தத் தரவுக் கட்டமைப்பானது நேற்று (20) பகல் 12.50 மணி முதல் செயலிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகிறது.

இந்தக் கட்டமைப்பை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

banner

இதற்கமைவாக, தரவுக் கட்டமைப்பு சீரமைக்கப்படும் வரை நற்சான்றிதழ்களுக்காக விண்ணப்பிக்க வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

You may also like

Leave a Comment