Sri Lanka News
கெஹெலிய மனைவி மற்றும் மகள் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் இன்று (18) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிக்க வந்தனர்.
அறிவிக்கப்படாத சொத்துக்களை ஈட்டுவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் மூவர் கைது செய்யப்பட்டனர்.