Sports
7வது முறையாக சாதனை படைத்த அம்பாறை மாவட்ட ஹொக்கி அணி.

இன்று ஜூலை 13 மாகாண மட்ட ஹொக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், அம்பாறை மாவட்ட அணியும் திருகோணமலை மாவட்ட அணியும் மோதின. இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்ற அம்பாறை மாவட்ட ஆண்கள் அணி, தேசிய மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது!
தொடர்ச்சியாக 7 வருடங்கள் மாகாண சாம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது அம்பாறை மாவட்ட அணி என்பது குறிப்பிடத்தக்கது!
அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடுகிற பிரதேச செயலகமாக காரைதீவு பிரதேச செயலகம் அமைந்துள்ளது.
அவர்களின் கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்!
அடுத்த கட்ட வெற்றியும் உங்களை வந்து சேரட்டும்!