News
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியினர்

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரே இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்திருந்தனர்.
இலங்கையின் அரசியல் நிலவரம் தொடர்பாகவும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்மக்களின் நலன்புரிக்கான அபிவிருத்தி திட்டங்கள் உட்பட இலங்கையில் இந்தியா முன்னெடுக்கும் பல்வேறு இருதரப்பு முன்னெடுப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது