News

போர் நிறுத்த அறிவிப்பால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு

ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. 109 டாலரில் தொடங்கிய ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 91 டாலர்கள் வரை சரிந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது.லண்டன் சந்தையில் வர்த்தகமாகும் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 15.21 சதவீதம் வீழ்ச்சியடைந்து ஒரு பேரலுக்கு 91.93 டாலர் வரை குறைந்துள்ளது. அமெரிக்காவில் வர்த்தகமாகும் WTI கச்சா எண்ணெய் விலை 16.40 சதவீதம் குறைந்து 91.21 டாலர் வரை குறைந்துள்ளது.

WTI கச்சா எண்ணெய் 96.43 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 94.80 டாலருக்கும் வர்த்தகமாகி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button