Home இலங்கைச் செய்திகள்சிலோன் மீடியா போரத்தின் ஊடகவியலாளர் சந்திப்பும் நன்றி நவிலல் நிகழ்வும்

சிலோன் மீடியா போரத்தின் ஊடகவியலாளர் சந்திப்பும் நன்றி நவிலல் நிகழ்வும்

by Nabishad
0 comments

நூருல் ஹுதா உமர்

சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில், மயோன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் அண்மையில் நடைபெற்ற இரு நாள் நுவரெலியா ஊடகச் சுற்றுப்பயணத்திற்கு பங்களிப்பு வழங்கியவர்களை கௌரவிக்கும் “நன்றி நவிலலும் கௌரவ விருந்தும்” நிகழ்வு நேற்று (22) சனிக்கிழமை ஒலுவில் ஓஷியன் கார்டனில் சிறப்பாக நடைபெற்றது.

சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நுவரெலியா ஊடகச் சுற்றுப்பயணத்தின் வெற்றிக்கு முழுமையான ஆதரவையும் நிதி அனுசரணையையும் வழங்கியவர்கள் மற்றும் மயோன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். றிஸ்வான் உள்ளிட்ட நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், அவர்களுக்காக சிறப்பு பகல் விருந்தும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் செயலாளர் நூருல் ஹூதா உமர், பொருளாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித், அமைப்பாளர் எம்.வை. அமீர், அரசியல் விமர்சகரும் சமூக செயற்பாட்டாளருமான முனை மருதவன் எம்.எச்.எம். இப்றாஹிம், சமாதான ஊடக அமைப்பின் தலைவரும் மாஸ்டர் பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான எம்.எம். ஜெஸ்மின், மயோன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். றிஸ்வான், சிரேஷ்ட ஒலி ஒளிபரப்பாளர் மனிதநேயன் இர்ஷாத் ஏ. காதர், ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை முகாமையாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான யூ.எல்.எம். றியாஸ், லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க்ஸ் தலைவர் ஏ.எல். அன்சார், சன்றைஸ் பணிப்பாளரும் தொழிலதிபருமான எச். அமானுல்லாஹ், ஸ்கை தமிழ் நெட்வேர்க்ஸ் நிறுவுனர் ஜே.எம். வாஸித்,எப். நியூஸ் பணிப்பாளர் பளீல் ஏ. மஜீத், சிலோன் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

banner

நிகழ்வின் விசேட அம்சமாக அரசியல் விமர்சகரும் சமூக செயற்பாட்டாளருமான முனை மருதவன் எம்.எச்.எம். இப்றாஹிம் அவர்களுக்கு தொழிலதிபர் எச். அமானுல்லாஹ் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

ஊடகவியலாளர்களிடையேயான ஒற்றுமை, நல்லுறவு மற்றும் ஊடகப் பணிகளுக்கான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, அனுசரணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் இடம்பெற்ற சிறப்பு கலை நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவுற்றது.

You may also like

Leave a Comment