-Nabishad Abu Hanshif-
அஹங்கம கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குறைந்தது 22 அனுமதியற்ற கட்டிடங்கள் நேற்று அதிகாரிகளால் இடித்து அகற்றப்பட்டன.
இதில் கடற்கரையை ஒட்டியிருந்த பல உணவகங்கள் மற்றும் கஃபேக்களும் அடங்குகின்றன.
சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களத்தினால் இந்த இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையின் கடலோர வலயத்தில் 2,500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத கட்டிடங்கள் இருப்பதாக குறித்த திணைக்களம் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது.
கரையோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெர்னி பிரதீப் குமார தெரிவிக்கையில், அனுமதியற்ற கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தற்போதுள்ள விதிமுறைகளின்படி கடற்கரையிலிருந்து 10 முதல் 25 மீற்றர் வரையிலான கரையோரப் பகுதியில் கட்டிட நிர்மாணப் பணிகளை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

