Sri Lanka News
ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை உறுதி செய்த மேல் நீதிமன்றம்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர்க்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் முன்னர் விதித்திருந்த சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதிப்படுத்தியுள்ளது.
தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இரத்து செய்து விடுதலை செய்யுமாறு கோரி அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்த மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
2016 ஆம் ஆண்டு கிருலப்பனை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டதாக குற்றம் சுமத்தி, தண்டனைச் சட்டத்தின் கீழ் பொலிஸார் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்




