Sri Lanka News

சம்மாந்துறை அல் இஸ்லாஹ் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை நிகழ்வு -2025

✍️மஜீட் ARM

​2025 செப்டம்பர் 20 இன்று, சம்மாந்துறை அல் இஸ்லாஹ் இஸ்லாமிய பாலர் பாடசாலையில் நடைபெற்ற சிறுவர் சந்தை நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.​

சிறுவர்களின் திறமைகளையும், ஆளுமையையும் வளர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், தங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் கிடைத்தது.​

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக தேசிய பாடசாலையின் அதிபர் அல் A.R.M.உவைஸ் , Z.M. நிஸ்வி (I.S.A), மற்றும் அல் இஸ்லாஹ் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் பணிப்பாளர் U.L.M. சலாஹுத்தீன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.​

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரின் உற்சாகமான பங்கேற்புடன் இந்த நிகழ்வு பெரும் வெற்றியைப் பெற்றது.சம்மாந்துறை அல் இஸ்லாஹ் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் ​​அடுத்த ஆண்டு (2026) புதிய மாணவர் அனுமதி இப்போது நடைபெறுகிறது!

உங்கள் குழந்தைகளையும் அல் இஸ்லாஹ் பாடசாலையில் இணைத்து, அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ள இன்றே எமது நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளுங்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button