Accident
லொறி மோதி யானைக்குட்டி பலி – கல்கமுவவில் சம்பவம்.

குருணாகல், கல்கமுவ பகுதியில் இன்று (09) காலை நடந்த விபத்தில் யானைக் குட்டி ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
லொறி ஒன்று யானைக் குட்டியுடன் மோதியதனால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்கமுவ, காசிகோட் பகுதியில் உள்ள அலிமன்கட என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.




