உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் புதிய விலைப்பட்டியல்

பேலியகொட மற்றும் கொழும்பு – புறக்கோட்டை பொருளாதார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.
இதன்படி, வெலிமடை மற்றும் நுவரெலியா உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 180 ரூபாயிலிருந்து 240 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அத்துடன், பாகிஸ்தான் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 160 ரூபாயிலிருந்து 170 ரூபாய் வரையிலும் ஈரான் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 180 ரூபாயிலிருந்து 190 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றது.
யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் இந்தியன் சின்ன வெங்காயம் ஒரு கிலோகிராம் 180 ரூபாயிலிருந்து 230 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதேவேளை, உள்ளூர் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 120 ரூபாயிலிருந்து 130 ரூபாய் வரையிலும் இந்தியன் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 115 ரூபாயிலிருந்து 125 ரூபாய் வரையிலும் விற்பனையாகின்றது.
வெள்ளைப்பூடு ஒரு கிலோகிராம் 350 ரூபாய்க்கும், செத்தல் மிளகாய் ஒரு கிலோகிராம் 600 ரூபாயிலிருந்து 630 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதனிடையே, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின், மரக்கறி விலையைப் பொறுத்தவரையில் லீக்ஸ், பீட்றூட், கோவா போஞ்சி, கரட், தக்காளி உட்பட்ட மலைநாட்டு மரக்கறிகள் 70 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டன.
தேசிக்காய் ஒரு கிலோவின் விலை 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.



