Sri Lanka News
கொழும்பின் காணி பெறுமதி அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தின் காணிக்கான பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, இது 11.4 சதவீத அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குடியிருப்பு காணிக்கான பெறுமதி 14.4 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
அதேநேரம், வர்த்தகம் தொடர்பான காணிகளுக்கான பெறுமதி 11.5 சதவீதமாகவும், கைத்தொழில் துறைசார்ந்த காணிகளுக்கான பெறுமதி 8.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.