Sri Lanka News
மரக்கறி விலையில் தாக்கம் செலுத்தும் வானிலை

நாட்டில் நிலவி வரும் மழையுடனான வானிலையை அடுத்து மத்திய மலைநாட்டின் மரக்கறி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலைப்பட்டியலுக்கு அமைய, குடை மிளகாய் 1kg 1,400 முதல் 1,500 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அத்துடன், கோவா 1kg 90 முதல் 110 ரூபாய் வரையிலும், கரட் 1kg 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரையிலும், லீக்ஸ் 1kg 110 ரூபாய் முதல் 140 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் 1kg கோவா 60 ரூபாய் முதல் 70 ரூபாவுக்கும், கரட் 120 ரூபாய் முதல் 150 ரூபாவுக்கும், இடைப்பட்ட விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




