ரோஹித்தும் விராட்டும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஓட்டங்கள் குவிக்காவிட்டால் நீக்கப்படுவார்களா?

இந்திய கிரிக்கெட் வீரர்கள், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பெறுவது குறித்து அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளிலிருந்தும், இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இவர்கள் இருவரின் பெயரும் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் “அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓட்டங்கள் குவிக்காவிட்டால், ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், மூன்று போட்டிகளிலும் சதங்கள் விளாசினால் அவர்கள் உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்றும் அர்த்தமாகாது.
2027 உலகக் கோப்பைத் தொடருக்கான அணியைத் தேர்வு செய்ய இன்னும் நாள்கள் இருக்கின்றன” என்றார்.



