ஐக்கிய அரபு அமீரகத்தில் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கிய டிக் டாக் நிறுவனம்

அபுதாபி: சமூக வழிகாட்டுதல்களை மீறிய காரணத்தால், 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில், 1 மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்களை டிக் டாக் நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நீக்கியுள்ளது.
இது தொடர்பாக டிக் டாக் நிறுவனம் வெளியிட்டுள்ள முதலாம் காலாண்டு சமூக வழிகாட்டல் அமலாக்க அறிக்கையில்,
87,000க்கும் அதிகமான நேரலை ஹோஸ்ட் கணக்குகள் தடைசெய்யப்பட்டுள்ளன,
மேலும் 1.4 லட்சத்திற்கும் மேற்பட்ட லைவ் ஸ்ட்ரீம்கள் முடக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகள் (MENA) பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், டிக் டாக் நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, ஈராக், லெபனான் மற்றும் மொரோக்கோ ஆகிய ஐந்து நாடுகளில் மட்டும் மொத்தமாக 16.5 மில்லியன் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




