Sri Lanka News
கிழக்கு மாகாண ஆளுநருடன் 22வது காலாட் படைப் பிரிவு தளபதி சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, 22வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ள்யூ.பி.எம்.கே.ஜி.கே. வீரசேகர இடையிலான சந்திப்பு இன்று (20) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
22வது காலாட் படைப் பிரிவின் 34வது தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் டப்ள்யூ.பி.எம்.கே.ஜி.கே. வீரசேகர , ஜனவரி மாதம் 05 ஆம் திகதி திருகோணமலையில் அமைந்துள்ள அந்தப் படைப் பிரிவு தலைமையகத்தில் தமது பதவியின் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.



