Sri Lanka News

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் வட, கிழக்கு இணைப்பில்லை

– அபூர்வ ஆளுமை கொண்ட இரா.சம்பந்தன் ஐயாவின் நிலைப்பாடு – நினைவுரையில் ரவூப் ஹக்கீம்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

முஸ்லிம்களின் சம்மதமில்லாமல் ஒரு போதும் வட, கிழக்கு இணைப்பில்லை என மறைந்த அபூர்வ ஆளுமை இரா.சம்பந்தன் ஐயா தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் என ரவூப் ஹக்கீம் நேற்று (25) இடம்பெற்ற ஆர்.சம்பந்தன், மாலினி பொன்சேகா, லக்கி ஜெயவர்தன ஆகியோர் பற்றிய அனுதாபப்பிரேரணையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) மறைந்த அண்ணன் ஆர் .சம்பந்தன் பற்றிய அனுதாபப்பிரேரணையில் தொடந்து உரையாற்றிய ரவூப் ஹக்கீம், கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் பாராளுமன்றத்தில் நாங்கள் மிக அபூர்வமாக காண்கின்ற ஆளுமை என்று சொன்னால் அது மிகையாகாது.

சம்பந்தனுடைய அரசியல் வெவ்வேறு யுகங்களாகப் பிரித்து ஆராயப்பட வேண்டும். அவருடைய சரிதை எழுதப்படுகின்ற போது அந்தந்த யுகங்களில் தமிழ் சமூகத்தின் விடுதலைக்கான அவருடைய பங்களிப்பை நாம் நிறையவே பேசலாம்.

உண்மையில் தமிழர் விடுதலைக்கூட்டணி என்ற அடிப்படையில் தமிழ் விடுதலைக்கட்சிகளை ஒன்றிணத்து தமிழர் விடுதலைப்போராட்டத்திற்கான ஜனநாயகப் போராட்டத்தை பாராளுமன்றத்தினூடாக செய்வதற்காக முதல் முறையில் அவர் 1977ம் ஆண்டு தந்தை செல்வாவுடைய மரணத்திற்கு பின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் அமிர்தலிங்கத்தின் தலைமையில் பாராளுமன்றத்திற்கு வந்தார்.

1983ம் ஆண்டு கலவரத்திற்குப்பிற்பாடு தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் இச்சபையிலிருந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமாச் செய்த பின்னணியில், அவரும் இராஜினாமா செய்து தமிழகம் சென்றார்.

தமிழகத்திலிருந்து கொண்டு அகதியாக தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக அவர் முன்னெடுத்த போராட்டம், அப்போராட்டத்தில் மும்மூர்த்திகளாக அண்ணன் அமிர்தலிங்கம், அண்ணன் சிவசிதம்பரம், அண்ணன் சம்பந்தன் ஆகியோர் இருந்தார்கள்.மேலும், தமிழர் விடுதலைக்கான நீண்ட போராட்டத்தில் இந்திய அரசோடு நீண்ட பேச்சுவார்த்ததைகளிலும் ஈடுபட்டனர்.

இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி உட்பட இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு காரணமாக அமைந்த மிக முக்கியமான அரசியல் தலைமை எங்களுக்கு மத்தியில் இன்றில்லை என்பதையும் அந்த இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போது, இலங்கை முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்ற வ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button