Sports

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்ரிக்கா டெஸ்ட் சாம்பியன் ஆகுமா? பரபரப்பான கட்டத்தில் இறுதிப்போட்டி..!

உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனையை தென் ஆப்ரிக்கா இன்று நிகழ்த்தும் என்றும், உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவு தென் ஆப்ரிக்காவுக்கு இன்று நனவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில், 282 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தென் ஆப்பிரிக்கா தொடங்கியது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 56 ஓவர்களில் 213 ரன்கள் சேர்த்துள்ளது.

களத்தில் உள்ள தென் ஆப்ரிக்காவின் பவுமா – மார்க்ரம் ஜோடி தங்களின் அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஏதேனும் மாயஜாலம் நிகழ்த்துமா அல்லது தென்ஆப்ரிக்க பேட்டர்களின் தீர்க்கமான நம்பிக்கை வெல்லுமா என்பது தெரிந்துவிடும்

ஸ்டார்க் அரைசதம்
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கும், தென் ஆப்ரிக்க அணி 138 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்திருந்தது. மிட்ஷெல் ஸ்டார்க் 16, நேதன் லாயன் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

3வது நாளில் இருந்து ஆடுகளம் பேட்டர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் என கணிக்கப்பட்டது. லேயான் 2 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். கடைசி விக்கெட்டுக்கு ஹேசல்வுட்டுடன் ஜோடி சேர்ந்த ஸ்டார்க், ஆடுகளத்தின் தன்மையைப் பயன்படுத்தி அரைசதம் அடித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button