Sports
நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயம் கபடியில் மாகாண சாதனை! தேசிய போட்டிக்கு முன்னேற்றம்!

Social TV
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட கபடி போட்டிகள் ஜூலை 2 மற்றும் 3, 2025 ஆகிய திகதிகளில் நிந்தவூர் MAC உள்ளக அரங்கில் கோலாகலமாக நடைபெற்றன.
இந்த போட்டிகளில் நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தின் கபடி அணிகள் மிகச் சிறப்பாக சோபித்துள்ளன!
🏆 17 வயது ஆண்கள் கபடி அணி – தங்கப் பதக்கம் (மாநிலச் சாம்பியன்)!
🥉 20 வயது ஆண்கள் கபடி அணி – வெண்கலப் பதக்கம் (3 ஆம் இடம்)!
இந்த இரண்டு அணிகளும் தேசிய மட்ட கபடிப் போட்டிக்குத் தெரிவாகி, அல்-மதீனா மகா வித்தியாலயத்திற்கும் நிந்தவூருக்கும் பெருமை சேர்த்துள்ளன!
அல்-மதீனா மகா வித்தியாலயத்தின் கபடி வீரர்களுக்கு சோசியல் டிவி தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. தேசிய மட்டத்திலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறோம்!
#champion #ninthavur #பாடசாலை #almathina