World News
சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 34 பேர் பலி

சீரற்ற வானிலையால் வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடக்கே உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான ஹா லாங் விரிகுடாவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பெரும்பாலான பயணிகள் தலைநகர் ஹனோயிலிருந்து வருகை தந்த வியட்நாமிய குடும்பங்கள் என்று கூறப்படுகிறது.
பலத்த மழை, உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதில் இடையூறாக இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர்.
எனினும் இதுவரை 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த படகு நேற்று மாலை 53 பேருடன் பயணித்த போது விபத்துக்குள்ளாகியுள்ளது.