Sri Lanka News

மட்டக்களப்பில் மூன்று பாடசாலைகளில் பரபரப்பு; 44 மாணவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளில் உணவு ஒவ்வாமையால் 44 மாணவர்கள் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளில் இடைவேளையின் போது குறித்த பாடசாலைகளில் அமைந்துள்ள சிற்றுண்டி சாலைகளில் உணவு வாங்கி மாணவர்கள் உட்கொண்டுள்ளனர்.

அவ்வாறு மாணவர்கள் வாக்கி உட்கொண்ட உணவு ஒவ்வாமையால் மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வுணவை உட்கொண்ட மாணவர்களுக்கு வாந்தி, தலைசுற்று ஏற்பட்டதன் காரணமாக உடனடியாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தினர் துரிதமான நடவடிக்கை மேற்கொண்டு, நோய்காவு வண்டிகள் மூலம் மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரசேவை தொற்றா நோய்கள் பிரிவின் வைத்திய அதிகாரி எஸ்.உதயகுமார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இதுதொடர்பில் மட்டக்களப்பு பொலிசாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பாடசாலைகளில் இயங்கிவரும் சிற்றுண்டிச் சாலைகளுக்கு ஒரு இடத்திலிருந்தே உணவு விநியோகித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரியவந்துள்ளது.

மாணவர்கள் குறித்த பாடசாலைகளில் பிட்டு வாங்கி உண்டதாகவும் தெரிய வருகிறது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button