Sri Lanka News

🔴வாக்குமூலம் பெறும் முறையை விளக்கும் புதிய சுற்றறிக்கை – உயர் நீதிமன்றத்தில் தகவல்!

முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படும் போது, ​​முறைப்பாட்டின் உள்ளடக்கம் தொடர்பில் குறித்த நபருக்கு எவ்வாறு அறிவிக்க வேண்டும் என்பதைக் குறிக்கும் சுற்றறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர் நேற்று (3) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு எதிராக எரிசக்தி நிபுணரான விதுர ருலபனாவ தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு விசாரணைக்கு வந்தபோது இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

சமூக ஊடகம் ஒன்றில் தான் பதிவிட்ட ஒரு கருத்து தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெற விரும்புவதாகக் கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தொலைபேசியில் தன்னை அழைத்ததாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது தனக்கு எதிரான முறைப்பாடு என்ன? அதன் உள்ளடக்கம் என்ன என்று சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியிடம் கேட்டதாகவும், பிரதிவாதியான பொலிஸ் அதிகாரி அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதிவாதியான பொலிஸ் அதிகாரி அத்தகைய தகவல்களை வழங்காமல் தனது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் கணினி குற்றப் பிரிவின் பிற அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜரானபோது அளித்த உறுதிமொழியின்படி, தொடர்புடைய சுற்றறிக்கையை தயாரித்து நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கியுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பில் தான் திருப்தி அடைந்துள்ளதாகவும், மனுவின் விசாரணையை அதற்கேற்ப நிறைவு செய்ய முடியும் என்றும் மனுதாரரின் சட்டத்தரணி நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

அதன்படி, மனுவின் விசாரணையை நிறைவு செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பரிசோதகர், அந்த பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் பெயரிடப்பட்டிருந்தனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button