சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் சிறுவர் சந்தை நிகழ்வு!

SOCIAL TV
தில்சாத் பர்வீஸ்
மாணவர்களின் திறமைகள் வெளிப்படவும், வணிகத்துறையில் ஆரம்ப அறிவை வளர்த்திடவும் நோக்கமாகக் கொண்டு சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் சிறுவர் சந்தை (Kids Market) நிகழ்வு இன்று (15) செவ்வாய்க்கிழமை பாடசாலை அதிபர் ஏ.முத்தலிப் தலைமையில் நடைபெற்றது.
சிறுவர்கள், சிறுமியர்கள் தாங்களே தயாரித்த அல்லது அழகுபடுத்திய உணவுப் பொருட்கள், கலைப்பொருட்கள், அழகுப் பொருட்கள், உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனைக்கு வைத்தனர். ஒழுங்கான கடைகள், வாடிக்கையாளர் சேவை, விலை பேச்சுவார்த்தை உள்ளிட்ட வணிக அனுபவங்களை சிறுவர்கள் இதன் மூலம் கற்றுக்கொண்டனர்.
மேலும், மாணவர்களின் சுயதிறன் வளர்ச்சி, பொறுப்புணர்வு மற்றும் வணிக சிந்தனையை ஊக்குவிக்க ஒரு அரிய வாய்ப்பாக இச் சிறுவர் சந்தை அமைந்துள்ளது.
இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.