News

கடவத்தை – மீரிகம அதிவேக வீதி கட்டுமானப் பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்!

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான கட்டுமானப் பணிகளை இன்று (17) அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்போது, கடவத்தை இன்டர்சேஞ்ச் மற்றும் அதிவேக வீதியின் முதல் 500 மீற்றர் பகுதியின் கட்டுமானப் பணிகளும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக அரசாங்கம் 8.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த வீதிக்கு ஒதுக்கப்பட்ட கடன் வசதிகள் நிறுத்தப்பட்டதால், இந்தப் பகுதியின் கட்டுமானம் 2022 நடுப்பகுதியில் நிறுத்தப்பட்டது.

கட்டுமானத்தை மீண்டும் தொடங்க சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியால் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இணையான யுவான் கடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 2028 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மத்திய அதிவேக வீதியின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான தூரம் 37 கிலோமீற்றர் ஆகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button