சம்மாந்துறை பிரதேச சபை சாம்பியன் கிண்ணத்தை வென்றது!

✍️மஜீட். ARM
சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் வைத்தியசாலை அணிகளுக்கிடையே நடைபெற்ற சிநேகபூர்வ கிரிக்கெட் தொடரில், சம்மாந்துறை பிரதேச சபை அணி வெற்றி கிண்ணத்தைத் தட்டிச் சென்றது!
இந்த நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், KM/ST/சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மைதானத்தில் இன்று (ஜூலை 30) நடைபெற்ற இப்போட்டியில் மொத்தம் 4 அணிகள் பங்கேற்றன:
* சம்மாந்துறை பிரதேச செயலக அணி * சம்மாந்துறை வைத்தியசாலை அணி * சம்மாந்துறை பிரதேச சபை அணி
* சம்மாந்துறை பிரதேச செயலக B அணிபோட்டியின் சிறந்த ஆட்டக்காரராகவும், தொடரின் ஆட்ட நாயகனாகவும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஆர். ஆஷிக் முஹம்மட் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்!
இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபை அணிக்கு உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்!