Sports
கபில்தேவ், அஸ்வின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!

வெளிநாடுகளில் நடைபெற்ற சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர் எனும் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.
லார்ட்ஸில் நடைபெற்று வரும் இங்கிலாது அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் எதிரணி பேட்டர்களை தடுமாற வைத்ததுடன் தனது 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில் இப்போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.