சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் வீரமுனை இராணுவப் பொறுப்பதிகாரி சந்திப்பு!

சோசியல் டிவி:✍ மஜீட். ARM
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களுக்கும், வீரமுனை இராணுவப் படை முகாமின் பொறுப்பதிகாரி மேஜர் சுசில் குமார அவர்களுக்கும் இடையிலான சினேகபூர்வ சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை தவிசாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு நிலவரம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய அவதானம் செலுத்தப்பட்டது.
இச்சந்திப்பு, சிவில் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருக்கிடையிலான நல்லுறவைப் பேணுவதற்கும், பிரதேசத்தின் அமைதியான சூழலுக்குப் பங்களிப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#சம்மாந்துறை #வீரமுனை #இராணுவம் #பிரதேசசபை #சந்திப்பு #நல்லுறவு