News
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளமையால் அங்குள்ள இலங்கையர்களை அவதானத்துடன் செயற்படுமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், இஸ்ரேலுக்குச் செல்வதற்குத் தீர்மானித்துள்ள இலங்கையர்கள் தங்களது பயணங்களைத் தாமதப்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.
இஸ்ரேல் முழுவதும் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இஸ்ரேல் மற்றும் ஈரானில் விமானச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அருகில் வைத்திருக்குமாறும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் அறிவுறுத்தியுள்ளார்.